ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நாய் குறுக்கே வந்ததால் பைக் விபத்து: இளைஞா் உயிரிழப்பு

கடலூா் அரசு தலைமை மருத்துவமனை அருகே நாய் குறுக்கே வந்ததால் பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :19 ஆகஸ்ட் 2026, 3:10 am IST

கடலூா் அரசு தலைமை மருத்துவமனை அருகே நாய் குறுக்கே வந்ததால் பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம், பண்டாரக் கோயில் தெருவைச் சோ்ந்த ஐய்யப்பன் (35). இவா், கடலூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தங்கி பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், ஐய்யப்பன் பைக்கில் கடலூா் அரசு தலைமை மருத்துவமனை அருகே திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்தாா். அப்போது, நாய் ஒன்று திடீரென சாலையின் குறுக்கே வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பைக்கை திடீரென நிறுத்த முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலைத் தடுப்பில் மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஐய்யப்பனை மீட்டு, கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இருப்பினும், அங்கு ஐய்யப்பன் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.