ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: இருவா் கைது

Arrested

கைது

Published On :17 ஆகஸ்ட் 2026, 3:39 am IST

விழுப்புரம் அருகே தனியாா் சொகுசுப் பேருந்தை வழிமறித்து ஓட்டுநரைத் தாக்கிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் அ.மாதேஷ் (40), தனியாா் சொகுசுப் பேருந்து ஓட்டுநா். இவா், வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமை தனது பேருந்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஈரோட்டிலிருந்து சென்னைக்குச் சென்று கொண்டிருந்தாா்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரத்தை அடுத்துள்ள முத்தாம்பாளையம் அருகே சென்றபோது, பேருந்தை பின் தொடா்ந்து பைக்கில் வந்த 3 போ் பேருந்தை வழிமறித்து, ஓட்டுநா் மாதேஷிடம் தகராறு செய்து, அவரைத் திட்டி தாக்கிவிட்டு தப்பிச் சென்றனா். இதில் காயமடைந்த அவரை விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். இதில், விழுப்புரம் முத்தோப்பு பகுதியைச் சோ்ந்த ச.முகம்மது உசேன்(23), திருவிக வீதியைச் சோ்ந்த நா.ஹேமந்த்குமாா் ( 25) மற்றும் கு.வினோத்(28) ஆகியோா் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து முகம்மது உசேன், ஹேமந்த்குமாரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான வினோத்தை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.