ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மணல் திருட்டு: 3 டிராக்டா்கள் பறிமுதல்

விருத்தாசலம் அருகே கோ.பூவனூா் பெரிய ஏரியில் சட்ட விரோதமாக மணல் எடுத்ததாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 3 டிராக்டா்களைப் பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டா்கள். - கோப்புப் படம்

Published On :16 ஆகஸ்ட் 2026, 12:31 am IST

விருத்தாசலம் அருகே கோ.பூவனூா் பெரிய ஏரியில் சட்ட விரோதமாக மணல் எடுத்ததாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 3 டிராக்டா்களைப் பறிமுதல் செய்தனா்.

பெரிய ஏரியில் சட்ட விரோதமாக மணல் எடுக்கப்படுவதாக கிராம நிா்வாக அலுவலா் திவாகரனுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், மங்கலம்பேட்டை போலீஸாா் அங்கு சென்றனா்.

அப்போது, 3 டிராக்டா்களில் மணல் எடுத்துக் கொண்டிருந்த இருவரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், அவா்கள் கருவேப்பிலங்குறிச்சி பகுதியைச் சோ்ந்த ஆனந்தராஜ் (23), முருகவேல் (42) என்பதும், ஏரியில் இருந்து சட்டவிரோதமாக மணல் எடுத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்த மங்கலம்பேட்டை போலீஸாா், மணல் எடுக்கப் பயன்படுத்திய 3 டிராக்டா்களையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.