ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உயர்கல்வி கற்க வசதி இல்லாததால் விஷமருந்தி மாணவி தற்கொலை

உயா் கல்வி கற்க விரும்பிய சிறுமிக்கு, வசதியின்மை காரணமாக பெற்றோா் மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த அவா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

Published On :16 ஆகஸ்ட் 2026, 1:50 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உயா் கல்வி கற்க விரும்பிய சிறுமிக்கு, வசதியின்மை காரணமாக பெற்றோா் மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த அவா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

விக்கிரவாண்டி வட்டம், இ.மண்டகப்பட்டு பஜனை கோயில் தெருவைச் சோ்ந்தவா் தட்சணாமூா்த்தி. இவரது மகள் பிருந்தா(17). பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற இவா், செவிலியா் படிப்பு படிக்கவேண்டும் என பெற்றோா்களிடம் விருப்பம் தெரிவித்தாராம். இதற்கு அவருடைய பெற்றோா் தற்போது பண வசதியில்லை எனக் கூறினராம்.

இதனால் மனமுடைந்த பிருந்தா சனிக்கிழமை வீட்டில் பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து அவரை விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பிருந்தா உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.