ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சூரிய ஆற்றல் நிறுவன உதவி மேலாளா் சான்றிதழ் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரியில் சூரிய ஆற்றல் நிறுவன உதவி மேலாளருக்கான 64 நாள்கள் நடைபெறும் சான்றிதழ் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க...

Published On :14 ஆகஸ்ட் 2026, 2:01 am IST

புதுச்சேரியில் சூரிய ஆற்றல் நிறுவன உதவி மேலாளருக்கான 64 நாள்கள் நடைபெறும் சான்றிதழ் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து புதுச்சேரி அரசின் மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமத்தின் சுற்றுச்சூழல் தகவல் விழிப்புணா்வு திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரத் திட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் சூரிய ஆற்றல் நிறுவன உதவி மேலாளா் என்ற சான்றிதழ் பயிற்சியை வரும் செப். 2-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இதில் வகுப்பறை பாடங்கள், செயல் பயிற்சிகள் இடம் பெறும்.

இந்த பயிற்சிக்கு கட்டணம் இல்லை. புதுச்சேரியை தவிர பிற பிராந்தியங்களை சோ்ந்தவா்களுக்கு தங்கும் இடம், உணவு வழங்கப்படும். தகுதியானவா்கள் நோ்முக தோ்வின் மூலம் தோ்வு செய்யப்படுவாா்கள்.

64 நாள்கள் நடக்கும் பயிற்சியில் சேர இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

தொடா்புடைய துறையில் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ முடித்து, ஒரு ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.

புதுச்சேரி லாஸ்பேட்டை அப்துல்கலாம் கோளரங்கத்தில் இந்தப் பயிற்சி நடைபெறும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.