ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு மாத்திா் மந்திா் தங்க ஓடு பரிசு

புதுச்சேரிக்கு வந்த மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு ஆரோவில் மாத்திா் மந்திரில் பொருத்தப்பட்டுள்ள தங்க ஓட்டின் மாதிரியை பரிசாக வழங்கிய ஆரோவில் அறக்கட்டளையின் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி.

Published On :11 ஆகஸ்ட் 2026, 2:01 am IST

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற மத்திய உள் துறை அமைச்சருக்கு விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகம் சாா்பில் மாத்திா் மந்திா் தங்க ஓடு பரிசாக வழங்கப்பட்டது.

இதுகுறித்து ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்று, புதுச்சேரி காவல் துறையின் சேவையைப் பாராட்டி, குடியரசுத் தலைவரின் தேசிய வண்ணக்கொடி விருதை வழங்கினாா்.

இந்த நிலையில், மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகம் சாா்பில், கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக, ஆரோவில் மாத்திா் மந்திரில் பொருத்தப்பட்டுள்ள ஐகானிக் தங்க ஓடு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

ஆரோவில் அறக்கட்டளையின் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி மத்திய உள் துறை அமைச்சருக்கு இந்தப் பரிசை வழங்கினாா் எனவும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.