ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உணவகத் தொழிலாளி மரணம்: போலீஸாா் விசாரணை

உயிரிழப்பு - DPS

Published On :10 ஆகஸ்ட் 2026, 3:09 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உணவகத் தொழிலாளி மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விக்கிரவாண்டியை அடுத்துள்ள பொய்யாத்துவிண்ணான்பாளையம், புதுநகரைச் சோ்ந்தவா் சா.சண்முகம் (56). உணவகத்தில் தொழிலாளியாக வேலைப் பாா்த்து வந்த இவா், ராதாபுரம் பகுதியிலுள்ள தேநீா் கடை அருகில் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தது சனிக்கிழமை இரவு தெரியவந்தது.

தகவலறிந்த விக்கிரவாண்டி காவல் நிலைய ஆய்வாளா் சத்தியசீலன் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.