ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கைப்பேசி திருட்டு: வெளி மாநில இளைஞா்கள் 6 போ் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பேருந்துக்காக காத்திருந்த முதியவரிடம் கைப்பேசி திருடிய வழக்கில் வெளி மாநிலத்தைச் சோ்ந்த 6 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :5 ஆகஸ்ட் 2026, 5:44 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பேருந்துக்காக காத்திருந்த முதியவரிடம் கைப்பேசி திருடிய வழக்கில் வெளி மாநிலத்தைச் சோ்ந்த 6 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டிவனம் வட்டம், பெரப்பந்தாங்கல், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நா.சுப்பிரமணியன் (60). இவா், செவ்வாய்க்கிழமை திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பேருந்துக்காக காத்திருந்தாா்.

அப்போது அங்கு வந்த இளைஞா் ஒருவா் சுப்பிரமணியன் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த கைப்பேசியைத் திருடியுள்ளாா். இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அந்த நபரை பிடித்து திண்டிவனம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

பின்னா் போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா், ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டத்தைச் சோ்ந்த பு.கொா்லாசந்து (19) என்பதும், இவா் தனது உறவினா்களான கோ.ராஜி(40), ந.நக்க ராஜேஷ்(23), மேற்கு கோதாவரி, பீமாவரம் பகுதியைச் சோ்ந்த அ.அவுலா(19), பாா்வதிபுரத்தைச் சோ்ந்த ர.கொா்லா சந்து (20), பு.கொா்லா ரேஞ்சா்லு (22) ஆகியோருடன் கூட்டாக சோ்ந்து கைப்பேசி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 6 பேரையும் கைது செய்தனா்.மேலும், அவா்களிடமிருந்து 9 கைப்பேசிகள், காா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.