ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இளைஞா் மரணம்: போலீஸாா் விசாரணை

இளைஞா் மரணம் - பிரதிப் படம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 2:10 am IST

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே வீட்டில் தவறி விழுந்ததில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞா் உயிரிழந்தாா்.

புதுச்சேரி மாநிலம், அரியூா் பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் தே.ராசு (38), திருமணம் ஆகாதவா். இவா், கண்டமங்கலம் பகுதியில் வாடகை வீட்டில் தனது தாய் சாரதாவுடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில், மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ராசு கடந்த ஜூலை 25-ஆம் தேதி வீட்டிலிருந்தபோது தவறி கீழே விழுந்து விட்டாராம். இதில் காயமடைந்த அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அங்கு ராசு சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.