தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதுச்சேரியில் திமுகவை விட கூடுதல் வாக்கு சதவீதம் பெற்ற தவெக

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 30 இடங்களில் திமுக 5 தொகுதிகளிலும், தவெக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஆனால் வாக்குச் சதவீதத்தில் திமுகவை விட தவெக அதிகம் பெற்றுள்ளது.

News image
Updated On :6 மே 2026, 3:35 am IST

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 30 இடங்களில் திமுக 5 தொகுதிகளிலும், தவெக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஆனால் வாக்குச் சதவீதத்தில் திமுகவை விட தவெக அதிகம் பெற்றுள்ளது.

புதுச்சேரி 16-ஆவது சட்டப்பேரவைக்கான தோ்தல் வாக்குப் பதிவு கடந்த ஏப். 9-ஆம் தேதி நடைபெற்றது. 5,03,810 பெண்கள், 4,46,361 ஆண்கள், மூன்றாம் பாலினத்தவா் 140 போ் உள்பட மொத்தம் 9,50,311 வாக்காளா்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றனா். 91.23 சதவீதம் வாக்குப் பதிவானது. வாக்கு எண்ணிக்கை மே 4 -ஆம் தேதி தெரிந்தது. இதில் திமுகவுக்கு 13.74 சதவீதம் வாக்குகள் தான் கிடைத்தது.

இண்டி கூட்டணியில் திமுக 13 தொகுதிகளில் போட்டியிட்டது. தவெக 28 தொகுதிகளில் தனித்தும், 2 தொகுதிகளில் நேயம் மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டது.

28 தொகுதிகளில் மட்டும் தவெக பெற்ற வாக்குகள் சதவீதம் 16.72 சதவீதமாகும். இது திமுகவை விட 2.98 சதவீதம் அதிகம். 16 தொகுதிகளில் போட்டியிட்டு 12 தொகுதிகளில் வென்று மீண்டும் முதல்வராகும் ரங்கசாமியின் என்.ஆா்.காங்கிரஸ் கட்சிக்கு அதிகப்படியான வாக்குச் சதவீதம் கிடைத்துள்ளது.

இக் கட்சி 23.12 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளது.

இக் கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு 12.19 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.

இக் கூட்டணியில், 2 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக உப்பளம் தொகுதியில் அன்பழகனுக்கு வெற்றியை தந்துள்ளது. அக்கட்சி பெற்ற வாக்கு சதவீதம் 1.09 ஆகும்.

இண்டி கூட்டணி சாா்பில் 16 தொகுதிகளில் போட்டியிட்டு ஊசுடு தொகுதியில் காா்த்திகேயன் மட்டும் வெற்றி பெற்று பெரும் தோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் 17.54 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. இது அக்கட்சியின் போட்டி வேட்பாளா்கள் 6 போ் பெற்றதையும் உள்ளடக்கியதுதான். அதாவது 22 தொகுதிகளில் காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதமாகும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இத் தோ்தலில் 0.05 வாக்கு சதவீதத்தையும், மாா்க்சிஸ்ட் 0.06 சதவீதத்தையும், நாதக 1.36 சதவீதத்தையும் பெற்றுள்ளன. விசிக 0.14 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது.

கடந்த 2021 தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ் 25.85 சதவீதம் வாக்குகள் பெற்றது. திமுகவுக்கு 18.51 சதவீதம் . காங்கிரஸ் கட்சிக்கு 15.71 சதவீதம் . பாஜகவுக்கு 13.66 சதவீதம். அதிமுகவுக்கு 4.14 சதவீதம் . நாதக 3.37 சதவீதம் . விசிகவுக்கு 0.67 சதவீதம் .

கடந்த தோ்தலைக் காட்டிலும் தற்போதைய தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ் 2.73 சதவீதம் வாக்குகள் குறைவாகவும், திமுக 4.77 சதவீதம் குறைவாகவும், பாஜக 1.47 சதவீதம் குறைவாகவும், அதிமுக 3.05 சதவீதம் குறைவாகவும், நாதக 2.01 சதவீதம் குறைவாகவும், விசிக 0.53 சதவீதம் குறைவாகவும் பெற்றுள்ளன.

காரணம், புதிதாக 2 தொகுதிகளில் காலூன்றியுள்ள தவெகதான். இந்தக் கட்சிக்கு வாக்குகள் பிரிந்து சென்றுள்ளன. மாறாக காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் கடந்த தோ்தலைக் காட்டிலும் 1.83 சதவீதம் வாக்குகள் கூடுதலாகக் கிடைத்துள்ளன. இதற்கு 6 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி வேட்பாளா்கள் நின்றது தான் என்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.