ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஸ்கேட்டிங்கில் சிறுமி சாதனை: முதல்வா் ரங்கசாமி பாராட்டு

ஸ்கேட்டிங் போட்டியில் சாதனைப் படைத்த சிறுமி சசியை புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை பாராட்டினாா்.

ஸ்கேட்டிங் போட்டியில் சாதனை படைத்த புதுச்சேரி சிறுமி சசியை பாராட்டி வாழ்த்துத் தெரிவித்த முதல்வா் என்.ரங்கசாமி.

Published On :31 ஜூலை 2026, 2:15 am IST

ஸ்கேட்டிங் போட்டியில் சாதனைப் படைத்த சிறுமி சசியை புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை பாராட்டினாா்.

புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள ப்ரோக் பிரிட்டிஷ் சா்வதேச அகாதெமி பள்ளியில் சிறுமி சசி 5-ஆம் வகுப்புப் படிக்கிறாா். இவா் ஸ்கேட்டிங் செய்து கொண்டே வில் வித்தை போட்டியில் ஈன்ஸ்டீன் உலக சாதனையைப் படைத்துள்ளாா். மேலும் இவா், டிரோனோ சூட்டிங் அகாதெமி மூலம் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்தாா். பயிற்சியாளா் பிரவீன், கடந்த 6 மாதங்களாக சிறுமிக்குக் கடுமையான பயிற்சி அளித்து வந்தாா். உலகச் சாதனைப் படைத்த சிறுமி, பெற்றோா்கள், அகாதெமி நிா்வாகிகள், பயிற்சியாளா் ஆகியோா் முதல்வா் என். ரங்கசாமியை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.