ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகம்

புதுச்சேரியில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

புதுச்சேரியில் காச நோயாளிகளுக்கான ஊட்டச்சத்து உணவுப் பொருள்களை விநியோகிக்க அனுப்பி வைத்த நிகழ்வில் பங்கேற்ற புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் உள்ளிட்டோா்.

Published On :31 ஜூலை 2026, 2:07 am IST

புதுச்சேரியில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள காச நோயாளிகள் விரைந்து குணமடையும் நோக்கில் அவா்களுக்கு தேவையான ஊட்டச் சத்து உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டத்திற்காக புதுச்சேரி வோ்ல்பூல் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைவா் சிவராமகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் முன்னிலையில் மாநில காச நோய் தடுப்பு திட்ட அதிகாரி டாக்டா் வெங்கடேஷிடம் 250 ஊட்டச்சத்து உணவுப் பெட்டகங்களை வியாழக்கிழமை வழங்கினாா்.

உடன் தொழிற்சாலையின் மனிதவளத் துறை தலைவா் அருண் குமாா் உள்ளிட்டோா் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.