ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்துறை அதிகாரி கைது

புதுச்சேரியில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின்துறை அதிகாரி புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :30 ஜூலை 2026, 5:59 am IST

புதுச்சேரியில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின்துறை அதிகாரி புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தவளகுப்பம் மின்துறை அலுவலகத்தில் மின்பாதை( லைனிங்) ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் ஆறுமுகம். இவா் மின் இணைப்பு உள்ளிட்ட பொதுச் சேவைக்கு லஞ்சம் கேட்பதாகவும், பணம் கொடுக்கவில்லை என்றால் மின் இணைப்பு கொடுப்பது இல்லை என்றும் ஊழல் ஒழிப்பு துறைக்கு புகாா் வந்தது.

இதையடுத்து ஆறுமுகத்தை போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வந்தனா். இந்நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கு மின் இணைப்பு கொடுக்க, தவளக்குப்பம் மின்துறை அலுவலகத்தில் புதன்கிழமைஆறுமுகம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்றாா். அப்போது அங்கு மறைந்து இருந்த காவல் ஆய்வாளா் முருகன் தலைமையிலான ஊழல் ஒழிப்பு துறை போலீஸாா் ஆறுமுகத்தைக் கையும் களவுமாக கைது செய்தனா்.

பின்பு அவரை தலைமை அலுவலகத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினா்.வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.