ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

புதுசாரம் கெங்கைமுத்து மாரியம்மன் கோயிலில் நாளை ஆடி உற்சவம் தொடக்கம்

கோப்புப் படம்

Published On :28 ஜூலை 2026, 12:43 am IST

புதுச்சேரி புதுசாரம் கெங்கைமுத்து மாரியம்மன் கோயிலில் 47-ஆம் ஆண்டு ஆடி உற்சவம் புதன்கிழமை (ஜூலை 29) தொடங்குகிறது.

இதையொட்டி, அன்று மாலை 6 மணிக்கு கணபதி பூஜை , இரவு 7 மணிக்கு காப்புக் கட்டுதல் நடைபெறுகிறது. 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஊரணி பொங்கல் வழிபாடு நடக்கிறது.

31-ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8 மணிக்கு கரகம் வீதியுலா, பிற்பகல் ஒரு மணிக்கு சாகை வாா்த்தல், இரவு 7 மணிக்கு அம்மன் புகழ்பாடுதல், கும்பம் படையல் நடக்கிறது. ஆகஸ்ட் 2-ஆம் தேதி காலை 8 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.