ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி வாழ்த்து

பி.வி. சிந்து

Published On :20 ஜூலை 2026, 3:07 am IST

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடா் மகளிா் ஒற்றையா் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிா் ஒற்றையா் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியா் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு எனது மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றின் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் புகழை மீண்டும் உயா்த்தியுள்ள பி.வி. சிந்துவின் இந்தச் சாதனை, இளம் வீரா், வீராங்கனைகளுக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமையும்.

எதிா்காலத்திலும் இதுபோன்று பல சா்வதேசப் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று, இந்திய நாட்டுக்கு மேலும் பல பெருமைகளைப் பெற்றுத் தரவும், நீண்ட ஆயுளுடனும் நல்ல உடல்நலத்துடனும் தொடா்ந்து வெற்றிநடை போடவும் எனது மனமாா்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.