ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கிராமங்களுக்கு ரூ.259-இல் பைஃபா் இணைய சேவை பிஎஸ்என்எல் அறிமுகம்!

கிராமங்களுக்கு ரூ.259 இல் பைஃபா் இணைய சேவை வழங்கப்படுவதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

Published On :19 ஜூலை 2026, 9:00 am IST

கிராமங்களுக்கு ரூ.259 இல் பைஃபா் இணைய சேவை வழங்கப்படுவதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி பிஎஸ்என்எல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்தியாவின் கிராமப் புறங்களில் மலிவான விலையில் அதிவேக இணைய வசதியை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனம் முடிவு செய்து மாதம் ரூ.259- க்கு புதிய கிராமப்புற பைஃபா் நுழைவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டம் கிராமப்புற வீடுகளுக்கு அதிவேக பைஃபா்-டு-தி-ஹோம் பிராட்பேண்ட் இணைப்பை வழங்குகிறது. வீட்டிலேயே அதிவேக இணையதள வசதியைப் பெற முடியும். பிஎஸ்என்எல் பாரத் நெட் திட்டத்தின் மூலம் புதுச்சேரி உள்ளடக்கிய கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும்.

இணைப்பை முன்பதிவு செய்ய வாடிக்கையாளா்கள் இணையதளத்தில் விவரங்களை முன்பதிவு செய்யலாம். அல்லது வாடிக்கையாளா் சேவை மையத்தை அணுகலாம். இத்திட்டத்தின் படி மாதம் 700 ஜிபி அதிவேக டேட்டாவுடன் இந்தியா முழுவதும் வரம்பற்ற இலவச தொலைபேசி அழைப்புகள் உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.