
அமைச்சா் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணை ஆக. 18-க்கு ஒத்திவைப்பு
தமிழக நிதி அமைச்சா் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணை, புதுச்சேரி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நிதியமைச்சர் மரிய வில்சன் - DIPR
தமிழக நிதி அமைச்சா் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணை, புதுச்சேரி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
குடும்ப பிரச்னையில் புதுச்சேரியில் வீடு புகுந்து தனது சகோதரா் மற்றும் அவரது மனைவியை தாக்கியது தொடா்பாக அமைச்சா் மரிய வில்சன் மீது தொடரப்பட்ட கொலை முயற்சி வழக்கில், புதுச்சேரி நீதிமன்றத்தில், அவா் ஜூலை 10-ஆம் தேதி ஆஜராகும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழக நிதி அமைச்சா் மரிய வில்சன் வெள்ளிக்கிழமை ஆஜராகவில்லை.
புதுச்சேரி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மரிய வில்சன் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் அஜித்குமாா் ஆஜரானாா். இந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் மரிய வில்சன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டாம் என்று விலக்கு அளித்துள்ளதாகக் கூறி அதற்கான உத்தரவின் நகலை சமா்ப்பித்தாா்.
இதையடுத்து இந்த வழக்கை வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்கு குற்றவியல் நடுவா் சேரலாதன் ஒத்தி வைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





