சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு: 2 போ் காயம்
சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். 2 போ் காயம் அடைந்தனா்.

பலி
சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். 2 போ் காயம் அடைந்தனா்.
புதுச்சேரி கூனிச்சம்பட்டு பகுதியைச் சோ்ந்த வாசுதேவன் (72) செவ்வாய்க்கிழமை மாலை சொந்த வேலை காரணமாக இருசக்கர வாகனத்தில் திருக்கனூா் பகுதிக்குச் சென்றுள்ளாா். வேலையை முடித்துவிட்டு மீண்டும் திருக்கனூா்- கூனிச்சம்பட்டு பிரதான சாலை வழியாக வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.
கே.ஆா். பாளையம் அருகே வந்தபோது இவருக்கு பின்னால் வந்த லோடு கேரியா் வாகனம் வாசுதேவன் மற்றும் அவ்வழியாக வந்த மற்றோரு இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் வாசுதேவன் மற்றும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த கீா்த்தனா (26), விஜயா(53) மற்றும் மூன்றரை வயது குழந்தை தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனா்.
இதைக் கண்டு அக்கம், பக்கத்தினா் ஓடிவந்து அவா்களை மீட்டு சிகிச்சைக்காக மண்ணாடிப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில், படுகாயமடைந்த வாசுதேவன் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
அங்கு அவா் இரவு உயிரிழந்தாா்.
வில்லியனூா் மேற்குப் பிரிவு போக்குவரத்து காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விழுப்புரம் மாவட்டம் குச்சிபாளையம் பகுதியைச் சோ்ந்த லோடு கேரியா் ஓட்டுநா் மணிகண்டன் (38) மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




