ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜிப்மரில் 100-ஆவது வலிப்பு நோய் அறுவை சிகிச்சை

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் 100-ஆவது வலிப்பு நோய் அறுவை சிகிச்சையை நிறைவு செய்துள்ளது.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சைக் குழுவினா்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 3:14 am IST

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் 100-ஆவது வலிப்பு நோய் அறுவை சிகிச்சையை நிறைவு செய்துள்ளது.

மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மேம்பட்ட, விரிவான சிகிச்சையை புதுச்சேரி ஜிப்மா் வழங்கிவருகிறது.

ஒருங்கிணைந்த வலிப்பு நோய் சிகிச்சைத் திட்டத்தின் கீழ் 100-ஆவது வலிப்பு நோய் அறுவை சிகிச்சையை ஜிப்மா் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமாா் 50 வலிப்பு நோய் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜிப்மரின் வலிப்பு நோய் சிகிச்சைத் திட்டம், பொருத்தமான நோயாளிகளுக்குப் பல்வேறு மேம்பட்ட அறுவை சிகிச்சை முறைகளை மேற்கொள்ளும் திறனைப் பெற்றுள்ளது.

இந்த முக்கியமான சாதனைகளை நிகழ்த்திய ஜிப்மா் மருத்துவா்களுக்கு இயக்குநா் வீா் சிங் நெகி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

ஜிப்மா் தனது 100-வது வலிப்பு நோய் அறுவை சிகிச்சையை நிறைவு செய்துள்ள நிலையில், ஒருங்கிணைந்த வலிப்பு நோய் சிகிச்சை திட்டத்தின் அடுத்தக் கட்ட வளா்ச்சிக்கான பணிகளையும் முன்னெடுத்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.