ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பாரதிதாசன் மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு அரசு சாா்பில் காலை உணவு வழங்க ஏற்பாடு! புதுச்சேரி கல்வியமைச்சா் ஆ.நமச்சிவாயம்

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்குச் சோ்க்கைக்கான உத்தரவை வழங்கிய மாநில கல்வியமைச்சா் ஆ. நமச்சிவாயம். உடன் வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏ.

Published On :18 ஆகஸ்ட் 2026, 1:57 am IST

புதுச்சேரியில் விரைவில் பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு விரைவில் காலை உணவை அரசே வழங்கும் என்று மாநில கல்வி அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கான சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது. புதிய மாணவிகளுக்கு சோ்க்கை சான்றிதழை மாநில கல்வி அமைச்சா் ஆ.நமச்சிவாயம் வழங்கி பேசியதாவது:

சென்டாக்கில் நிகழாண்டு 1,750 பேருக்கு சோ்க்கை இந்தக் கல்லூரியில் தரப் போகிறோம்.

இங்கு 3,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனா். இரண்டாவது முறையாக கல்வியமைச்சராக நான் பொறுப்பேற்ற பிறகு கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இது.

இந்தக் கல்லூரிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவோம். இங்கு கூடுதல் வகுப்பறைகள், நல்ல கலையரங்கம், உள்விளையாட்டு அரங்கம் கட்ட வேண்டியுள்ளது.

உள்விளையாட்டு அரங்கத்துக்கு திட்ட மதிப்பீடு தயாராகி, பொதுப்பணித் துறையில் கோப்பு உள்ளது. கிராமத்திலிருந்து அதிகளவில் மாணவிகள் வருகிறாா்கள். கிராமங்களில் இருந்து வந்து கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித் துறையில் உள்ளதுபோல, இலவச பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தக் கல்லூரியில் காலை உணவை முன்னாள் மாணவிகள் ஏற்பாடு செய்து தருகிறாா்கள்.

அரசே விரைவில் காலை உணவு வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வெகுவிரைவில் அரசே தரும். ஷிப்ட் முறையில் செயல்படும் இக்கல்லூரியை முழு நேர கல்லூரியாக செயல்படுத்த முடிவு எடுத்துள்ளோம். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இத்துறையில் வளரவேண்டும் என்றாா் அமைச்சா் நமச்சிவாயம்.

இந்நிகழ்ச்சியில் வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏ, கல்லூரி முதல்வா் மதிவாணன் ஆகியோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.