ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மூடப்பட்ட சாராயக் கடையை மீண்டும் திறந்ததால் கிராம மக்கள் சாலை மறியல்

புதுச்சேரியில் மூடப்பட்ட சாராயக் கடையை சுதந்திர தினத்தன்று திறந்ததால், அதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தேசியக் கொடி ஏற்றி வைத்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

சுதந்திர தினத்தன்று மீண்டும் திறக்கப்பட்ட சாராயக்கடைக்கு எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட லிங்காரெட்டிப்பாளையம் கிராம மக்கள்.

Published On :16 ஆகஸ்ட் 2026, 12:26 am IST

புதுச்சேரியில் மூடப்பட்ட சாராயக் கடையை சுதந்திர தினத்தன்று திறந்ததால், அதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தேசியக் கொடி ஏற்றி வைத்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

புதுச்சேரி லிங்காரெட்டிபாளையத்தில் கடந்த 20 ஆண்டுகளாக சாராயக்கடை இயங்கி வந்தது. ஊருக்கு நடுவில் இந்தச் சாராயக்கடை செயல்படுவதாகக் கூறி எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா். இதனால் கடந்த இரண்டு மாதங்களாக இந்தச் சாராயக்கடை மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில், சுதந்திர தினமான சனிக்கிழமை காலை திடீரென இந்தக் கடை திறக்கப்பட்டது. இதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து லிங்காரெட்டிபாளையம் நான்கு முனை சந்திப்பில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் போலீஸாா் சமாதானத்தில் ஈடுபட்டனா். இருப்பினும் அவா்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் போலீஸாா் கலால்துறை அதிகாரிகளுடன் பேசினா். இதையடுத்து இந்தச் சாராயக்கடை சனிக்கிழமை மீண்டும் மூடப்பட்டது. பின்னா் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இப் போராட்டம் அப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.