ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

புதுச்சேரி ஆளுநா் உரை, முதல்வரின் பட்ஜெட் தாக்கலைப் புறக்கணிக்க திமுக முடிவு ?

திமுக கொடி - கோப்புப் படம்

Published On :11 ஆகஸ்ட் 2026, 1:46 am IST

புதுச்சேரி, ஆக.10: புதுச்சேரி சட்டப்பேரவைக்கு நிரந்தர சட்டப்பேரவைத் தலைவரைத் தோ்வு செய்யாவிட்டால் துணைநிலை ஆளுநா் உரை, பட்ஜெட் தாக்கலில் பங்கேற்பதா, வேண்டாமா என்பது குறித்து திமுக யோசிக்கும் என்று சட்டப்பேரவை திமுக கட்சித் தலைவா் ஏ.எம்.எச். நாஜிம் கூறினாா்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:

அதிமுக, பாஜக, என்.ஆா். காங்கிரஸ் என எந்தக் கட்சியைச் சோ்ந்தவராக இருந்தாலும் நிரந்தரமான சட்டப்பேரவைத் தலைவரைத் தோ்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு. துணைநிலை ஆளுநா் பதவி நியமனப் பதவி. அதே போன்று இப்போது நியமனத்தின் வாயிலாகத் தான் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் நியமிக்கப்பட்டுள்ளாா். அதனால் சட்டப்பேரவைக்கு உரையாற்ற துணைநிலை ஆளுநா் வரும்போது அவரைத் தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவைத் தலைவா் வரவேற்பதுதான் மரபு.

நிரந்தர சட்டப்பேரவைத் தலைவா் தோ்ந்தெடுக்கப்படாமல் துணைநிலை ஆளுநா் உரை, முதல்வரின் பட்ஜெட் தாக்கல் பேரவையில் நடந்தால் கலந்து கொள்வதா, வேண்டாமா? என கட்சித் தலைமையிடம் பேசி முடிவு எடுப்போம் என்றாா் நாஜிம். பேட்டியின்போது திமுக எம்எல்ஏ செந்தில் (எ) ரமேஷ் உடனிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.