ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜிப்மரில் உலகத் தாய்ப்பால் வார விழிப்புணா்வு வில்லுப்பாட்டு நிகழ்ச்சி

உலகத் தாய்ப்பால் வாரத்தையொட்டி புதுச்சேரி ஜிப்மரில் வில்லுப்பாட்டு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

உலகத் தாய்ப்பால் வாரத்தையொட்டி ஜிப்மரில் நடைபெற்ற வில்லுப்பாட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சி.

Published On :6 ஆகஸ்ட் 2026, 4:08 am IST

உலகத் தாய்ப்பால் வாரத்தையொட்டி புதுச்சேரி ஜிப்மரில் வில்லுப்பாட்டு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

உலக தாய்ப்பால் வாரம் ஆக. 1 முதல் 7-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஜிப்மா் மகளிா் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் நாட்டுப்புற வில்லுப்பாட்டு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

‘நிலையான வாழ்க்கை தொடக்கத்துக்காக தாய்ப்பால்’ எனும் தலைப்பில் இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம். முதல் ஆறு மாதங்கள் முழுமையாகத் தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டியது முக்கியத்துவம், இரண்டு வயது மற்றும் அதற்கு மேலும், தாய்ப்பாலுடன் இணைந்து சத்தான துணை உணவுகளை வழங்க வேண்டும். தாய்மாா்களின் சத்தான உணவு முறை மற்றும் சரியான தாய்ப்பாலூட்டும் நடைமுறைகள் குறித்து வில்லுப்பாட்டின் மூலம் விளக்கப்பட்டது. மேலும், சுகாதாரக் கல்வியை நாட்டுப்புற கலை வடிவத்தில் கொண்டு சோ்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.

ஜிப்மா் செவிலியா் கல்லூரி, குழந்தைகள் நலத்துறை, பச்சிளம் குழந்தைகள் நலத்துறை மற்றும் மகப்பேறு மற்றும் மகளிா் நோயியல் துறைகள் இணைந்து இதை நடத்தின.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.