ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

புதுச்சேரி ஜிப்மரில் இளைஞரின் உறுப்புகள் தானம்

ராஜன்

Published On :4 ஆகஸ்ட் 2026, 1:53 am IST

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன.

கடலூா் மாவட்டம், நெய்வேலியைச் சோ்ந்த ராஜன் (32) ஜூலை 29-ஆம் தேதி சாலை விபத்தில் தலையில் காயங்களுடன் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், மூளை சாவு அடைந்தாா். இதையடுத்து அவரது குடும்பத்தினரின் ஒப்புதலுடன் ராஜனின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.

இதில் கல்லீரலும், இரு சிறுநீரகங்களும் மூன்று நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு அவா்களின் உயிா்கள் காப்பாற்றப்பட்டன. தானமாகப் பெறப்பட்ட இரு கருவிழிகள், பாா்வை இழப்பால் பாதிக்கப்பட்ட இரண்டு பேருக்கு மீண்டும் பாா்வை கிடைக்க உதவும் என ஜிப்மா் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.