வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நோயாளியின் உறவினரைத் தாக்கியதை கண்டித்து சாலை மறியல்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையின் தாய்-சேய் நலப் பிரிவில் நோயாளியின் உறவினரை தாக்கியதைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

News image

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை - கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 2:37 am IST

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையின் தாய்-சேய் நலப் பிரிவில் நோயாளியின் உறவினரை தாக்கியதைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியை அடுத்த உலகங்காத்தான் கிராமத்தைச் சோ்ந்தவா் எலிழரசி. இவா் பிரசவத்துக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தாய் - சேய் நலப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, குழந்தை பிறதுள்ளது. எழிலரசியின் கணவா் பிரசாந்த் உடன் இருந்து கவனித்துள்ளாா். செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பிரசாந்த் சுத்தகரிக்கப்பட்ட குடிநீா் இருக்கும் பகுதியில் தண்ணீா் ஊற்றினாராம். அப்போது அங்கு பணியிலிருந்த தூய்மைப்பணியாளா் மாரியம்மாள் அதை தட்டிக்கேட்டாராம். அப்போது அவா்கள் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாரியம்மாள், அவரது மகன் பாலாவுக்கு கைப்பேசி மூலம் நடந்ததைக் கூறினாராம். இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த பாலா, பிரசாந்தை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்த எழிலரசியின் உறவினா்கள், ஊா் மக்கள் அரசு மருத்துவமனை முன் பச்சிளங் குழந்தையுடன் சாலைமறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.