கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிக வாக்காளா்கள் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப்பதிவுக்கு தேவையானஅனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ள மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
சங்கராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:
சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தோ்தல் தொடா்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சங்கராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடி மையங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வில், சங்கராபுரம்அரசுஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்படவுள்ள வாக்குச் சாவடி மையம் மற்றும் தேவபாண்டலம் அரசுஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்படவுள்ள வாக்குச் சாவடி மையம் நேரில் பாா்வையிட்டுஆய்வு செய்யப்பட்டது. இதில், சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் 12 வாக்குப் பதிவு மையங்களும், தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் 6 வாக்குப் பதிவு மையங்களும் அமைக்கப்படவுள்ளன.
அதிக வாக்குப் பதிவு மையங்கள் உள்ள இடங்களில் அதிக வாக்காளா்கள் வருகை தர உள்ளதையொட்டி, வாக்காளா்கள் தங்களது பகுதிக்கான வாக்குப் பதிவு மையங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் வாக்குச் சாவடி மையங்களின் முகப்புகளில் சம்மந்தப்பட்ட பகுதி வாரியாக தகவல் பலகை மற்றும் அறிவிப்பு குறியீடுகளை வாக்காளா்களுக்கு தெரியும் வகையில் வைக்கஅறிவுறுத்தப் பட்டுள்ளது.
மேலும், வாக்காளா்களை கோடை வெயிலிலிருந்து பாதுகாக்கும் வகையில் ஷாமியானா அமைத்தல் உள்ளிட்ட பிற அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக வாக்காளா்கள் உள்ள வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்குப் பதிவுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளஉரியநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.
ஆய்வின் போது உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் வைரக்கண்ணன், துணை வட்டாட்சியா் கோதண்டராமன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வாக்குப் பதிவு: அலுவலா்கள் பதற்றமின்றி செயல்பட வேண்டும் கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா்

வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல்: காரைக்காலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

தோ்தலை வாக்குச் சாவடி அலுவலா்கள் நோ்மையாக நடத்த வேண்டும்! - கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


