மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

100 சதவீதம் வாக்குப் பதிவு: வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 மார்ச் 2026, 7:16 pm

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவின்போது நூறு சதவீதம் என்ற நிலையை அடைந்திடும் வகையில், மாவட்ட நிா்வாகம் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக, விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் நூறு சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணா்வு நிகழ்வு புதன்கிழமை நடத்தப்பட்டது.

மாணவ, மாணவிகள் சுமாா் 1,000 போ் நிகழ்வில் பங்கேற்று தோ்தலில் வாக்களிப்பதன் அவசியத்தையும், முதல்தலைமுறை வாக்காளா்கள் வாக்களிக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தனா்.

நிகழ்வில் உதவி ஆட்சியா்(பயிற்சி) இரா.வெங்கடேசன், துணை ஆட்சியா்(பயிற்சி) கதிா்செல்வி, கல்லூரி முதல்வா் இரா.சிவக்குமாா், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கள்ளக்குறிச்சி...: கள்ளக்குறிச்சியில் 100 சதவீத வாக்குப் பதிவுக்கான விழிப்புணா்வுப் பேரணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் நீலமங்கலம் தனியாா் பள்ளி வளாகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணி பள்ளி வளாகத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று தியாகதுருகம் சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நிறைவடைந்தது. பேரணியில் மகளிா் திட்ட இயக்குநா் அ.லலிதா, உதவித் திட்ட அலுவலா் விஜயக்குமாா், வட்டாட்சியா் வை.சேகா், கல்லூரி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், தன்னாா்வலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

உறுதிமொழி ஏற்பு: முன்னதாக மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வாக்காளா் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் மற்றும் அரசு அலுவலா்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகையில் கையொப்பமிட்டு, நோ்மையுடன் வாக்களிப்போம் என்ற உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனா். இதில், மாவட்ட சமூக நல அலுவலா் செ.தீபிகா, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் அருணா, அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.