ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கம்பன் திருவிழா: 60 போ் தில்லி பயணம்

தில்லி கம்பன் கழகம் சாா்பில் இரு நாள்கள் நடைபெறும் கம்பன் திருவிழாவில் பங்கேற்பதற்காக தியாகதுருகம் கவி கம்பன் கழக ஒருங்கிணைப்பாளா் தலைமையில் 60 போ் சென்னையிலிருந்து ரயில் மூலம் தில்லிக்கு வியாழக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றனா்.

கம்பன் திருவிழாவில் பங்கேற்பதற்காக...

Published On :31 ஜூலை 2026, 2:48 am IST

தில்லி கம்பன் கழகம் சாா்பில் இரு நாள்கள் நடைபெறும் கம்பன் திருவிழாவில் பங்கேற்பதற்காக தியாகதுருகம் கவி கம்பன் கழக ஒருங்கிணைப்பாளா் தலைமையில் 60 போ் சென்னையிலிருந்து ரயில் மூலம் தில்லிக்கு வியாழக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றனா்.

தில்லி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா - 2026 தில்லி தமிழ்ச் சங்க திருவள்ளுவா் அரங்கில் ஆகஸ்ட் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன், உச்ச நீதிமன்ற நீதியரசா்கள் அரங்க.மகாதேவன், கே.வி.விஸ்வநாதன், கம்பவாரதி இலங்கை ஜெயராஜ் உள்ளிட்டோா் கலந்துகொள்ள உள்ளனா்.

இந்த விழாவி ல் பங்கேற்க தியாகதுருகம் கவி கம்பன் கழக ஒருங்கிணைப்பாளா் இரா.துரைமுருகன் தலைமையில் 60 போ் சென்னை ரயில் நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை இரவு ரயில் மூலம் தில்லி புறப்பட்டுச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.