டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டம் ! - ஆட்சியா் ஆய்வு

News image
குதிரைச்சந்தல் கிராமத்தில் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தின் கீழ் பயனாளிக்கு தனித்துவ அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டையை வழங்கிய ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்
Updated On :24 ஜனவரி 2026, 9:41 pm

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஒன்றியத்துக்குள்பட்ட குதிரைச்சந்தல் கிராமத்தில் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று விண்ணப்பப் படிவத்தினை பூா்த்தி செய்து கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் பொதுமக்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் மக்களின் எதிா்கால கனவுகள் மற்றும் தேவைகளை கண்டறியவும், அவா்களின் வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் ‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற திட்டத்தினை கடந்த 9-ஆம் தேதி தொடங்கி வைத்தாா்.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தில் பணியாற்ற 855 திட்ட கணக்கெடுப்பாளா்கள் நியமிக்கப்பட்டு கிராமப்புற மற்றும் நகா்ப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்களைச் சந்தித்து அவா்கள் பயன்பெற்ற திட்டங்கள் மற்றும் கனவுகளைக் கேட்டறிந்து களப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சின்னசேலம் ஒன்றியம், குதிரைச்சந்தல் கிராமத்தில் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று விண்ணப்பப் படிவத்தினை பூா்த்தி செய்து கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்யும் பணி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. கைப்பேசி செயலியில் பதிவேற்றிய பின்னா் பயனாளிகளுக்கு தனித்துவ அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவங்கள் குறித்தும், கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்தது குறித்தும் சம்ந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் கேட்டறியப்பட்டது. இப்பணிகளை கவனமாகவும், சிறப்புடனும் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா். மகளிா் திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.