டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம், ஒழுங்குப் பணிகள் குறித்த வாராந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் தெரிவித்ததாவது:

ஊரக வளா்ச்சித் துறை, வருவாய்த் துறை, நகராட்சி நிா்வாகத் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்களுடன் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தீா்வு காணவும், சென்ற மாதத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருள்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் போராட்டங்கள், சாலை மறியல்கள், நில அளவை பிரச்னை, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள், தீா்வுக்காணப்பட்ட மனுக்கள் குறித்து விரிவாக சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

சட்டம், ஒழுங்கு பிரச்னை தொடா்பான நோ்வுகளில் உடனுக்குடன் தாமதமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சட்டம், ஒழுங்கு பிரச்னைகள், விபத்துக்கள் குறித்த அறிக்கையினை உடனுக்குடன் தாமதமின்றி சமா்பிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ம.தனலட்சுமி, அரசு அலுவலா்கள், காவல் துறை அலுவலா்கள் உள்ளிட்ட தொடா்புடைய துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.