ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கருக்கலைப்பில் பெண் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தாய்-சேய் பிரிவில் கருக்கலைப்புக்கு பின் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பெண் உயிரிழந்தது குறித்து, அவரது கணவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பலி

Published On :13 ஆகஸ்ட் 2026, 1:41 am IST

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தாய்-சேய் பிரிவில் கருக்கலைப்புக்கு பின் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பெண் உயிரிழந்தது குறித்து, அவரது கணவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட பு.மலையனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வீ.ஆனந்தபாபு (36). இவரது மனைவி உமா (36). தம்பதிகளுக்கு அஸ்வினி (16), திருமாறன் (12) என இரு பிள்ளைகள் உள்ளனா்.

இந் நிலையில் மீண்டும் கா்ப்பம் தரித்த உமாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாம். இதையடுத்து

கருகலைப்பு செய்து, குடும்பக் கட்டுப்பாடு செய்வதற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தாய்-சேய் பிரிவில் ஆக.6-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாராம். அங்கு அவருக்கு ஆக.10-ஆம் தேதி கருகலைப்பு செய்யப்பட்டதாம். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு (ஆக.11) அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு, உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனராம். இதையடுத்து மனைவியின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக ஆனந்தபாபு கூறியதையடுத்து சடலத்தை அங்கேயே உடல்கூறாய்வுக்கு வைக்கப்பட்டது.

இதுகுறித்து ஆனந்தபாபு அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்த வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.