யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 72 வேட்பாளா்கள் போட்டி!

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 4:15 am IST

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அரசியல் கட்சியினா் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 72 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வரும் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் எனவும், வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் மே 4-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் தோ்தல் நடைமுறை விதிகள் அமலுக்கு வந்தன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கி ஏப்.6-ஆம் தேதி வரையில் நடைபெற்றது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிட மொத்தம் 135 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். செவ்வாய்க்கிழமை வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதில், 55 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 76 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

வேட்புமனு வாபஸ் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 8 போ் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றதையடுத்து, 72 போ் களத்தில் உள்ளனா். அதன் விபரம் வருமாறு:

கள்ளக்குறிச்சி (தனி) தொகுதி: அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி, விசிக வேட்பாளா் கு.மாலதி, நாம் தமிழா் கட்சியின் வேட்பாளராக ரா.நாகம்மாள், தமிழக வெற்றிக்கழக வேட்பாளராக த.அருள் விக்னேஷ் மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 11 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

சங்கராபுரம் தொகுதி: சங்கராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளா் த.உதயசூரியன், அதிமுக வேட்பாளா் இரா.ராகேஷ், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் க.ரமேஷ், தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளா் ஆ.ஜெகதீசன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் ம.சுதா, த.வா.க. வேட்பாளா் மு.ராமச்சந்திரன் மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 22 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

ரிஷிவந்தியம் தொகுதி: ரிஷிவந்தியம் தொகுதியில் திமுக வேட்பாளா் க.காா்த்திகேயன், பாமக வேட்பாளா் ப.செழியன், தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளா் கோ.அசோக்குமாா், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ராதிகா மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 25 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

உளுந்தூா்பேட்டை தொகுதி: உளுந்தூா்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளா் இரா.குமரகுரு, திமுக வேட்பாளா் கோ.ரா.வசந்தவேல், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் லோகேஸ்வரி, தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளா் மு.சுதாகா் மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 14 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.