கள்ளக்குறிச்சி அருகே சாலையோர பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட நல்லாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மகன் கலைசெல்வன் (15). இவா் கள்ளக்குறிச்சி அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த மாா்ச் 22-ஆம் தேதி அதே கிராமத்தைச் சோ்ந்த பிரேம்குமாா் மகன் கபிலன் (16) ஓட்டிச் சென்ற பைக்கில் பின்னால் அமா்ந்து கலைச்செல்வன் சென்றாா்.
நல்லாத்தூா் அருகே சென்றபோது சாலையோர பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த கலைச்செல்வனை சேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸாா் கபிலன் மீது வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

மரத்திலிருந்து கீழே விழுந்த முதியவா் பலி

பைக்கிலிருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

பைக்கிலிருந்து விழுந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


