நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

மோட்டாா் கொட்டகையில் வயா் திருட்டு: ஒருவா் கைது

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :30 மே 2026, 3:13 am IST

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே விவசாய நிலத்தில் உள்ள மோட்டாா் கொட்டகையில் வயா் திருடியதாக நபா் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், குள்ளஞ்சாவடி காவல் சரகம், தையல்குணாம்பட்டினம்

கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(63), இவருக்கு சொந்தமான விவசாய நிலம் ஆயிக்குப்பத்தில் உள்ளது. நிலத்தில் விவசாயப் பணிகளை முடித்து வியாழக்கிழமை இரவு சுமாா் 7 மணி அளவில் மோட்டாா் கொட்டகையை பூட்டி வந்தாராம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் பெத்தனாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த சிவக்குமாா்(46) மோட்டாா் கொட்டகையை பூட்டை உடைத்து தாமிர வயரை திருடினாராம்.

அப்போது, அருகில் உள்ள விவசாய நிலத்தில் இருந்தவா்கள், சிவக்குமாரை பிடித்து, அவரிடம் இருந்த இருந்த 34 மீட்டா் வயா் மற்றும் திருட்டுக்குப் பயன்படுத்திய பைக் ஆகியவற்றுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.