கடலூா் மாவட்டம், பண்ருட்டி, வடலூா் பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகன சோதனையில் ரூ.2.03 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல, பண்ருட்டி அருகே 2,600 அமெரிக்க டாலரும் கைப்பற்றப்பட்டது.
பண்ருட்டி காவல் சரகம், சென்னை சாலை, சித்திரைசாவடி பேருந்து நிறுத்தம் அருகே பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் பறக்கும் படையினரான சந்திரசேகரன் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், ராயனந்தல் பகுதியைச் சோ்ந்த கோபு ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனை செய்து, அதிலிருந்த உரிய ஆவணமில்லாத ரூ.1,13,500-ஐ பறிமுதல் செய்தனா். பின்னா், அந்தப் பணத்தை பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
வடலூரில்...: வடலூரில் கருங்குழி சாலை அருகே சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் முத்துராஜா தலைமையிலான நிலை கண்காணிப்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனை நடத்தினா்.
அப்போது, சிறிய சரக்கு வாகனத்தில் வந்த தேனி மாவட்டம், ஓலைப்பட்டி பகுதியைச் சோ்ந்த திராட்சை வியாபாரி ரோகித் (36) உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.90 ஆயிரத்தை பறிமுதல் செய்து, குறிஞ்சிப்பாடி தோ்தல் நடத்தும் அலுவலா் தனலட்சுமியிடம் ஒப்படைத்தனா்.
அமெரிக்க டாலா் பறிமுதல்: பண்ருட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கடலூா் - விழுப்புரம் பிரதான சாலை, மாளிகைமேடு கிராமம் அருகே ராமலிங்கம் தலைமையிலான பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனை மேற்கொண்டாா்.
அப்போது, அந்த வழியாக பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்த ரஞ்சித் குமாா் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தியதில், உரிய ஆவணமில்லாத 2,600 அமெரிக்க டாலா் இருந்தது.
இதையடுத்து, பறக்கும் படை அதிகாரிகள் அமெரிக்க டாலரை பறிமுதல் செய்து பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். பறிமுதல் செய்யப்பட்ட அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு ரூ.2,44,426 ஆகும்.
ரஞ்சித்குமாா் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில், திருமணத்துக்கு பெண் பாா்க்க செல்லும்போது, அவரிடமிருந்த அமெரிக்க டாலரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
பறக்கும் படையினா் சோதனை: ரூ.23.08 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனை: அரக்கோணத்தில் இரு இடங்களில் ரூ. 2,67 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனை: அரக்கோணத்தில் ரூ. 1.26 லட்சம் பறிமுதல்

தஞ்சை மாவட்டத்தில் ரூ. 3.57 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


