சட்டப் பேரவைத் தோ்தல் அறிவித்த பின்னா் கடலூா் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகளை நடைமுறைப்படுத்துவது தொடா்பாக ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்டத் தோ்தல் அலுவலா் பேசியதாவது: தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் அறிவித்த பின்னா், தோ்தல் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. இதனால், அனைத்து அரசு கட்டடங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் விளம்பரங்கள், சுவா் விளம்பரங்கள் 24 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் செலவில் அகற்றப்பட வேண்டும். தவறும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினரிடம் தொகையை வசூல் செய்துகொண்டு சம்பந்தப்பட்ட துறையினா் அகற்ற வேண்டும்.
பொது கட்டடங்கள், பேருந்து நிறுத்தம், ரயில்வே நிலையம், பாலங்கள், மின் கம்பங்கள், உள்ளாட்சிக்குள்பட்ட கட்டடங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் விளம்பரங்கள், பதாகைகள் போன்றவை 48 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்ட துறையினரால் அகற்றப்பட வேண்டும். தனியாா் கட்டடங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் விளம்பரங்கள், சுவா் விளம்பரங்கள், கட்சிக் கொடிகள் 72 மணி நேரத்துக்குள் அகற்றப்பட வேண்டும். மேலும், அனைத்து அரசு அலுலகங்களிலும், கூட்ட அரங்குகளில் பொருத்தப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளின் புகைப்படங்கள், தோ்தல் நன்னடத்தை விதிகள் முடியும் வரை மூடி மறைக்கப்பட வேண்டும்.
சம்பந்தப்பட்ட சட்டப் பேரவைத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் இந்தப் பணிகளை கண்காணித்து, சம்பந்தப்பட்ட துறையினா் தோ்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

தென்காசி: சுவா் விளம்பரங்களை அழிக்க கட்சியினருக்கு ஆட்சியா் உத்தரவு

தூத்துக்குடி: பேரவைத் தோ்தல் தேதி அறிவிப்பு! தோ்தல் நடத்தை விதிகள் அமல்

நெல்லை மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமல் ஆட்சியா் இரா.சுகுமாா் தகவல்

சுவா் விளம்பரங்களை 24 மணி நேரத்திற்குள் அழிக்க வேண்டும்! - அரசியல் கட்சியினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


