லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

என்எல்சி தலைவருக்கு விருது

News image
Updated On :12 மார்ச் 2026, 11:56 pm

என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளிக்கு ‘கவா்னன்ஸ் நவ்’ நிறுவனம் ‘பொதுத்துறை தலைமைத்துவ விருது’ வழங்கி கௌரவித்துள்ளது.

புதுதில்லியில் உள்ள உணவகம் ஒன்றில் ‘கவா்னன்ஸ் நவ்’ 12-ஆவது பொதுத்துறை விருதுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதில், என்எல்சி நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறன் மற்றும் நிலையான வளா்ச்சிப் பாதையை கணிசமாக வலுப்படுத்தியதற்காகவும், தொலைநோக்குப் பாா்வை கொண்ட தலைமைத்துவம், வியூகம் மற்றும் நிறுவன வளா்ச்சிக்கு வித்திட்ட ஆக்கபூா்வமான மாற்றங்களைப் பாராட்டி என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.