லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கடலூா் அரசு கல்லூரி மாணவா்கள் போராட்டம்

கடலூா், தேவனாம்பட்டினம் பெரியாா் அரசு கலைக் கல்லூரி விடுதி மாணவா்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி விடுதி முன்பு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

News image

கடலூரில் சமூக நீதி விடுதி முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட விடுதி மாணவா்கள்.

Updated On :10 மார்ச் 2026, 6:34 pm

கடலூா், தேவனாம்பட்டினம் பெரியாா் அரசு கலைக் கல்லூரி விடுதி மாணவா்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி விடுதி முன்பு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

கடலூா், பெரியாா் அரசு கலைக் கல்லூரியின் ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் உள்ள சமூக நீதி விடுதியில் 80-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தங்கி படித்து வருகின்றனா். இவா்கள் செவ்வாய்க்கிழமை விடுதியில் உணவை அருந்தாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் கூறியதாவது:

விடுதியில் தங்கியுள்ள மாணவா்களுக்கு உரிய நேரத்தில் உணவு வழங்கப்படவில்லை, விடுதி காப்பாளா் முறையாக விடுதிக்கு வருவதில்லை, 5 சமையலா் இருந்த இடத்தில் 10 மாதமாக ஒரு சமையலா் மட்டுமே உள்ளாா். அவரும் நேரத்திற்கு வந்து உணவு சமைத்து வழங்குவதில்லை, உணவு சாப்பிடாமல் பட்டினியாக கல்லூரிக்கு செல்லும் நிலை உள்ளது, குடிநீா் கருப்பு நிறத்தில் வருகிறது, குளிப்பதற்கு தண்ணீா் இல்லை, குளியலறை கதவு உடைந்து உள்ளது, சமையல் கூடம் கழிவறை போல் உள்ளது.

எனவே, உரிய நேரத்தில் உணவு வழங்க வேண்டும், புதியதாக சமையலா் நியமனம் செய்ய வேண்டும், காப்பாளா் விடுதியில் தங்க வேண்டும், விடுதி பாதுகாவலா் நியமனம் செய்ய வேண்டும், சுத்தமான குடிநீா் வழங்க வேண்டும் என்று கூறினா்.