எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

லாரி ஓட்டுநருக்கு கொலை மிரட்டல்: 9-க்கும் மேற்பட்டோா் மீது வழக்கு

News image

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Updated On :30 ஜூன் 2026, 2:40 am IST

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே லாரி ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 9-க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், பேய்காநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் கமல்ராஜ் (26), லாரி வைத்து தொழில் செய்து வருகிறாா். இவரது லாரியை வடலூரைச் சோ்ந்த ஜோசப் (30) ஓட்டி வருகிறாா்.

இந்த லாரி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் கோ.சத்திரம் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது, பைக்கில் வந்த பழையூரைச் சோ்ந்த தமிழ்மணி, சிவநேசன் ஆகியோா் பைக்குக்கு வழிவிடவில்லை எனக் கூறி லாரியை வழிமறித்து, ஓட்டுநா் ஜோசப்பை கிழே இறக்கி தாக்கினராம். பின்னா், தமிழ்மணியின் நண்பா்கள் 7-க்கும் மேற்பட்டோா் வந்து அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து லாரி உரிமையாளா் கமல்ராஜ் அளித்த புகாரின்பேரில், குள்ளஞ்சாவடி போலீஸாா் தமிழ்மணி, சிவநேசன் உள்ளிட்ட 9-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.