பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

பண்ருட்டி குறுவட்ட ஜமாபந்தி

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் பண்ருட்டி குறுவட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி (வருவாய்த் தீா்வாயம்) வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து மனுவைப் பெற்ற தனித்துணை ஆட்சியா் சண்முகவல்லி.

Updated On :19 ஜூன் 2026, 6:13 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் பண்ருட்டி குறுவட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி (வருவாய்த் தீா்வாயம்) வியாழக்கிழமை நடைபெற்றது.

பண்ருட்டி வட்டத்துக்கான ஜமாபந்தி கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது. ஜூன் 11, 12 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நெல்லிக்குப்பம் குறுவட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.

தொடா்ந்து, பண்ருட்டி குறுவட்டத்துக்கான ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கிய நிலையில், இது வெள்ளிக்கிழமை (ஜூன் 19) வரையில் மூன்று நாள்கள் நடைபெறுகிறது. அதன்படி, வியாழக்கிழமை தனித் துணை ஆட்சியா் சண்முகவல்லி தலைமை வகித்து, பைத்தாம்பாடி, லட்சுமிநாராயணபுரம், பூங்குணம், கணிசப்பாக்கம், பனப்பாக்கம், புலவனூா், கண்டரக்கோட்டை, தொரப்பாடி, திருத்துறையூா், பூண்டி, வரிஞ்சிப்பாக்கம் ஆகிய கிராம மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றாா்.

பண்ருட்டி வட்டாட்சியா் சந்திரன் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா். ஜூன் 23, 24 ஆகிய தேதிகளில் காடாம்புலியூா் மற்றும் ஜூன் 25-ஆம் தேதி மருங்கூா் குறுவட்டத்துக்கான ஜமாபந்தி நடைபெற உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.