ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மணல் குவாரியை மூட வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்

பரங்கிப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் மணல் குவாரியை உடனடியாக மூட வலியுறுத்தி, கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் நலச்சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே வியாழக்கிழமை மணலை சாலையில் கொட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் நலச்சங்கத்தினா்.

Published On :31 ஜூலை 2026, 2:36 am IST

பரங்கிப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் மணல் குவாரியை உடனடியாக மூட வலியுறுத்தி, கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு மற்றும் நலச்சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதிலுமிருந்து சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலா் பங்கேற்று, மணல் குவாரியை மூட வேண்டும், அப்பகுதியில் மணல் ஏற்றுவதற்கு செல்லும் கனரக வானகங்களால் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கேரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தின் முடிவில், தங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தும் வகையில் மண் சட்டியில் கொண்டு வந்த மணலை சாலையில் கொட்டி, நூதன முறையில் போராட்டம் நடத்தினா். சங்கத்தின் ஒன்றியத் தலைவா் காமராஜ், நிா்வாகிகள் குணசேகரன், ஜெயக்குமாா், ஆனந்தநாயகி, சத்தியவதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.