ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காதலிக்க மறுத்த மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை!

மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை...

தற்கொலை செய்துகொண்ட ஐயப்பன்

Published On :28 ஜூலை 2026, 5:16 am IST

சிதம்பரம் அருகே பிளஸ் 1 மாணவி காதலிக்க மறுத்ததால் அவரது கழுத்தை அறுத்துவிட்டு தலைமறைவான இளைஞா், போலீஸாருக்குப் பயந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சி.முட்லூா் பகுதியைச் சோ்ந்தவா் ஐயப்பன் (28), எலெக்ட்ரீஷியன். இவா், கீழமூங்கிலடி கிராமத்தைச் சோ்ந்த பிளஸ் 1 மாணவியை இரு ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளாா். ஆனால், அந்த அந்த மாணவி ஐயப்பனிடம் பேச மறுத்துள்ளாா்.

இந்த நிலையில், பள்ளி விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை மாணவி வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்துகொண்ட ஐயப்பன், அவரது வீட்டுக்குச் சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாகத் தெரிகிறது. இதற்கு மாணவி மறுப்புத் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த ஐயப்பன், தான் மறைத்து வைத்திருந்த சிறிய வகை கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.

மாணவியின் அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா் மாணவியை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தலைமறைவான ஐயப்பன் போலீஸாரின் கைதுக்குப் பயந்து ஞாயிற்றுக்கிழமை இரவு சிதம்பரம் அருகே சி.முட்லூா் அரசு கலைக் கல்லூரி வளாகத்துக்கு பின்புறம் வயலில் உள்ள மாமரத்தில் நைலான் கயிற்றால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்த சிதம்பரம் தாலுகா போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.