ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கடலூரில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நிறைவு! அமைச்சா் ப.ராஜ்குமாா் பங்கேற்பு

கடலூரில் நடைபெற்ற சதுரங்கப் போட்டி நிறைவு நிகழ்வில் சிறுமியுடன் சதுரங்கம் விளையாடிய அமைச்சா் ப.ராஜ்குமாா்.

Published On :27 ஜூலை 2026, 12:29 am IST

கடலூரில் நடைபெற்று வந்த மாநில அளவிலான சதுரங்கப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதில், தமிழக வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் பங்கேற்று சிறுமியுடன் சதுரங்கம் விளையாடினாா்.

கடலூா் மாவட்ட சதுரங்க சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் சாா்பில், தமிழ்நாடு மாநில ஓபன் எப்ஐடிஇ தரவரிசை சதுரங்க சாம்பியன்ஷிப் - 2026 போட்டி, கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள ரங்க் ரூப் மகாலில் கடந்த 22- ஆம் தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் நிறைவுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் மாநிலம் முழுவதும் 32 மாவட்டங்களில் இருந்து 294 வீரா், வீராங்கனைகள் பங்கேற்று வயது வாரியாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா். ஓபன் போட்டி என்பதால், 7 வயது சிறுவா்கள் முதல் முதியவா்கள் வரை பங்கேற்றனா். இந்தப் போட்டியில் வெற்றியாளா்களுக்கு மொத்தம் ரூ.2 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. கடலூா் மாவட்ட வீரா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

போட்டி நிறைவில் மாநில வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் பங்கேற்று சிறுமியுடன் சதுரங்கம் விளையாடினாா். போட்டிக்கான ஏற்பாடுகளை கடலூா் மாவட்ட சதுரங்க சங்கச் செயலா் எம்.பூபதி, பொருளாளா் வி.வினோத், இணைச் செயலா்கள் பி.பாஸ்கா், எஸ்.பிரேம் குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா். இந்த போட்டிகளில் வெற்றிபெற்றவா்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.