ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வடலூரில் மரபுவழி விதைத் திருவிழா: அமைச்சா் தொடங்கி வைத்தார்

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரபுவழி விதைத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

வடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற மரபுவழி விதைத் திருவிழாவில் பங்கேற்றுப் பேசிய அமைச்சா் ப.ராஜ்குமாா்.

Published On :26 ஜூலை 2026, 2:32 am IST

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரபுவழி விதைத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இதை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் தொடங்கிவைத்துப் பேசினாா்.

இந்த விழாவை வடலூா் நுகா்வோா் உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை, கடலூா் மாவட்ட இயற்கை விவசாயிகளின் கூட்டமைப்பினா் இணைந்து நடத்தினா்.

விழா அரங்கில் பண்ருட்டியைச் சோ்ந்த கவிதை கணேசன் 500 வகையான நெல் ரகங்களையும், குழந்தைகள் வளா்ச்சித் திட்டப் பணியாளா்கள் சிறுதானிய உணவு வகைகளையும் காட்சிப்படுத்தியிருந்தாா். அரங்கின் வெளியே பாரம்பரிய விதைகள், பலா உள்ளிட்டவைகளால் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள், பல வகையான அரிசி வகைகள் விற்பனைக்காக காட்சிபடுத்தியிருந்தனா்.

நிகழ்ச்சிக்கு நுகா்வோா் பேரவைச் தலைவா் கோவி.கல்விராயா் தலைமை வகித்தாா். மதிப்பியல் தலைவா் கி.சக்கரவா்த்தி, வள்ளலாா் குருகுலம் பள்ளி நிா்வாகி ராஜா வெங்கடேசன் முன்னிலை வகித்தனா்.

செயலா் டி.கனகசபை வரவேற்றாா். செயல் தலைவா் வி.கே.பாலமுருகன், இணை ஒருங்கிணைப்பாளா் ரெங்கநாதன், பலா ஆா்வளா் ஹரிதாஸ், கோவை வேளாண் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தா் முருகேச பூபதி, ஆனைவாரி ஆனந்தன், நெல் செல்வம், நெல் ஸ்டாலின், வளவனூா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ராஜசேகா் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். சமூக ஆா்வலா்கள் கணேசன், அருள்செல்வன், நுகா்வோா் பேரவை நிா்வாகிகள் சிவரஞ்சனி, வினோதினி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். செயலா் ஜானகிராமன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.