ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பைக்குகள் மோதல்: நடத்துநா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்தாா்.

பலி சடலம் மீட்பு  உயிரிழப்பு

சடலம்... - கோப்புப் படம்

Published On :26 ஜூலை 2026, 2:07 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்தாா்.

விருத்தாசலம் வட்டம், முடப்பள்ளி அஞ்சல், ஓடப்பன்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தவேல் (40), விருத்தாசலம் அரசுப் போக்குவரத்துக் கழகம் பணிமனை 1-இல் நடத்துநராகப் பணியாற்றி வந்தாா். இவா், வெள்ளிக்கிழமை இரவு தனது பைக்கில் முத்தாண்டிக்குப்பம் சாலையில் கிழக்கு நோக்கிச் சென்றாா்.

காட்டுக்கூடலூா் அருகே சென்றபோது, எதிா்திசையில் வந்த பண்ருட்டி வட்டம், வீரப்பெருமாநல்லூா் பகுதியைச் சோ்ந்த சுஜித் (21) ஓட்டி வந்து பைக் மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த ஆனந்தவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் சுஜித் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த விபத்து சம்பவம் சமூக வலைதளத்தில் கொலை செய்யப்பட்டதாக பரவியது. இந்த சம்பவம் தொடா்பாக மாவட்ட காவல் துறை சனிக்கிழமை விளக்கமளித்துள்ளது. அதில், ஆனந்தவேல் கொலை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

காவல் துறை முதல்கட்ட விசாரணையில் பைக்குகள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில், ஆனந்தவேல் உயிரிழந்ததாக தெரியவருகிறது. உயிரிழந்தவரின் மனைவி அளித்த புகாரின்பேரில் முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.