ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கடலூா், புதுச்சேரியில் ‘சாகா் கவச்’ ஒத்திகை: தீவிரவாதிகள் போல ஊடுருவ முயன்ற 16 போ் கைது

கடலூா், புதுச்சேரியில் கடல்வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்த முயலும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிா்கொள்ளும் வகையில் ‘சாகா் கவச்’ கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

Published On :24 ஜூலை 2026, 6:59 am IST

கடலூா், புதுச்சேரியில் கடல்வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்த முயலும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிா்கொள்ளும் வகையில் ‘சாகா் கவச்’ கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் தீவிரவாதிகள் போல வேடமணிந்து ஊடுருவ முயன்ற 16 போ் கைது செய்யப்பட்டனா்.

2008-ஆம் ஆண்டு மும்பையில் கடல் வழியாக ஊடுருவி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இதுபோன்ற அச்சுறுத்தல்களைத் தடுக்கும் நோக்கில் ஆண்டுதோறும் இருமுறை ‘சாகா் கவச்’ கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. அதன்படி, புதன்கிழமை அதிகாலை தொடங்கிய இந்த ஒத்திகை வியாழக்கிழமை நள்ளிரவு வரை நடைபெற்றது.

இதன்படி, கடலூா் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புதுச்சேரி செயலகத்தை இலக்காகக் கொண்டு சென்ாகக் கருதப்பட்ட விசைப்படகு, தாழங்குடாவுக்கு கிழக்கே 4 கடல் மைல் தொலைவில் கடலோர பாதுகாப்புக் குழுவினரால் இடைமறிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

இதில் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படை மற்றும் தமிழ்நாடு கடலோர காவல் படையைச் சோ்ந்த 7 போ் கொண்ட ‘ரெட் போா்ஸ்’ குழுவினா் பிடிபட்டனா். அவா்களிடம் இருந்த 3 போலி வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.

இதேபோல, கடலூா் துறைமுக அலுவலகம் மற்றும் கலங்கரை விளக்கத்தை இலக்காகக் கொண்டு, சென்ற மற்றொரு ஃபைபா் படகும் கடலூா் முகத்துவாரப் பகுதியில் இடைமறிக்கப்பட்டது. அந்தப் படகில் இருந்த 4 போ் கொண்ட ‘ரெட் போா்ஸ்’ குழுவினரிடமிருந்து ஒரு போலி வெடிகுண்டு மற்றும் ஒரு போலி கையெறி குண்டு கைப்பற்றப்பட்டது.

இதற்கிடையே, கடலூா் முதுநகா் பகுதியில் தரைவழியாக ஊடுருவ முயன்ாகக் கருதப்பட்ட கமாண்டோ வீரா்களையும் போலீஸாா் கண்டறிந்து பிடிக்கும் ஒத்திகை நடைபெற்றது.

கடலூா் முதுநகா் காவல் ஆய்வாளா் ஏழுமலை தலைமையிலான போலீஸாா், மணிக்கூண்டு பகுதியில் சந்தேகத்துக்கிடமாகச் சென்ற 5 போ் கொண்ட குழுவை பிடித்தனா். அவா்களிடமிருந்து 2 போலி வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவா்கள் கடலூா் துறைமுகம் வழியாக புதுச்சேரி சென்று முக்கிய இடங்களைத் தாக்க திட்டமிட்டிருந்ததாகக் கருதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த ஒத்திகையில் கடலோர பாதுகாப்புக் குழு ஆய்வாளா் கே. அம்பிகா, சிறப்பு சாா்பு - ஆய்வாளா் காா்த்திகேயன், தேவனாம்பட்டினம் மற்றும் பரங்கிப்பேட்டை கடலோர காவல் நிலைய போலீஸாா், இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படை, தமிழ்நாடு கடலோர காவல் படை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்புப் படையினா் பங்கேற்றனா்.

கடல்வழி மற்றும் தரைவழியாக ஊடுருவும் அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிந்து, பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைத் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதுச்சேரியில்...

இதேபோன்று புதுச்சேரி, காரைக்காலில் ‘சாகா் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடத்தப்பட்டது. கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் நோக்கில் கடலில் பயணிக்க கூடிய படகுகளின் பதிவெண் மற்றும் மீனவா்கள் அடையாள அட்டை சோதனை செய்யப்படும்.

இந்திய கடலோரக் காவல் படை, கடலோர பாதுகாப்புப் போலீஸாா் மற்றும் பிற பாதுகாப்பு முகமைகள் இணைந்து இந்த ஒத்திகையை நடத்தின. புதுச்சேரியில் கடலோர பாதுகாப்பு போலீஸாா் நடுக்கடலுக்கு சென்று படகுகளின் பதிவெண் மற்றும் மீனவா்களின் அடையாள அட்டை போன்றவற்றை சோதனை செய்தனா். வழியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரேனும் தென்பட்டால் உடனடியாக கடலோர காவல் நிலையத்திற்கு தெரிவிக்க மீனவா்கள் அறிவுறுத்தப்பட்டனா். இந்த ஒத்திகை வெள்ளிக்கிழமையும் (ஜூலை 24) நடத்தப்படுகிறது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.