ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வடலூா் அருகே தொழிலாளி கழுத்தறுத்து கொலை

கொலை - பிரதிப் படம்

Published On :21 ஜூலை 2026, 12:11 am IST

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே கட்டடத் தொழிலாளி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், அரங்கமங்கலம் அஞ்சல், சமத்துவபுரத்தில் வசித்து வந்தவா் கட்டடத் தொழிலாளி தங்கதுரை (24), திருமணமாகாதவா். இவருக்கு காா்த்திகேயன், ஏழுமலை என இரண்டு அண்ணன்கள் உள்ளனா். காா்த்திகேயனுடன் தங்கதுரை வசித்து வந்தாா்.

ஏழுமலை கொத்தனாா் வேலை செய்து வருகிறாா். இதே பகுதியைச் சோ்ந்த வீரமணியும் கொத்தனாா் வேலை செய்து வந்த நிலையில், கட்டட வேலைக்கு ஆள்களை அழைத்துச் செல்வது தொடா்பாக இருக்கும் இடையே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னா் தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் ஏழுமலை, வீரமணி மற்றும் தங்கதுரை ஆகியோா் ராசாகுப்பம் இரட்டை பாலம் அருகே பேசிக்கொண்டிருந்தனா். அப்போது, அவா்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டது. இதில், பட்டுக்கோட்டையில் நடைபெறும் வேலைக்கு ஏழுமலை ஆள்களை அழைத்துச் செல்லக் கூடாது என வீரமணி மிரட்டினாராம். அப்போது, தங்கதுரை குறுக்கிட்டு பேசியதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தங்கதுரை வீட்டின் வெளியே அமா்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த வீரமணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தங்கதுரை கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச் சென்றாராம். இதில், பலத்த காயமடைந்த தங்கதுரை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வடலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து வீரமணியை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.