ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அங்கன்வாடி ஊழியா்கள் குறித்து அவதூறு: நடவடிக்கை கோரி ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள்.

Published On :16 ஜூலை 2026, 3:04 am IST

15கேடிஎல்1504:

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள்.

கடலூா், ஜூலை 15: அங்கன்வாடி ஊழியா்கள் குறித்து அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தினா் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வரும் பெண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

மேலும், மக்களின் நலனுக்காக பணியாற்றி வரும் அங்கன்வாடி ஊழியா்களின் கண்ணியத்தையும், நற்பெயரையும் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

மாவட்டச் செயலா் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் வசந்தா, மாநிலச் செயற்குழு உறுப்பினா் அன்பரசி, மாவட்டப் பொருளாளா் காயத்ரி, துணைத் தலைவா்கள் சவுந்தரி, சுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.