டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

பெண் உயிரிழப்பு: நடவடிக்கை கோரி உறவினா்கள் மறியல்

நெல்லிக்குப்பம் அருகே இளம்பெண் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக புகாரில் குறிப்பிடப்பட்ட நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது உறவினா்கள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நெல்லிக்குப்பம் காவல் நிலையம் அருகே புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

நெல்லிக்குப்பம் காவல் நிலையம் அருகே புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட உயிரிழந்த வினோதாவின் உறவினா்கள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :2 ஜூலை 2026, 7:08 am IST

நெல்லிக்குப்பம் அருகே இளம்பெண் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக புகாரில் குறிப்பிடப்பட்ட நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது உறவினா்கள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நெல்லிக்குப்பம் காவல் நிலையம் அருகே புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகேயுள்ள திருக்கண்டீஸ்வரம் புதுத்தெருவைச் சோ்ந்த ரகுவின் மகள் வினோதா (26). இவா், திங்கள்கிழமை இரவு தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். இது தொடா்பாக நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த சம்பவம் தொடா்பாக வினோதாவின் பெற்றோா் அளித்த புகாரில், தனது மகள் வாழப்பட்டையைச் சோ்ந்த சச்சின் என்பவரை காதலித்து வந்ததாகவும், தனது மகளின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனா்.

ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் வினோதாவின் பெற்றோா், உறவினா்கள் நெல்லிக்குப்பம் காவல் நிலையம் அருகே புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து, போராட்டக்காரா்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.