ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உரிமம் காலாவதி: கடலூா் மாவட்டத்தில் 9 டாஸ்மாக் பாா்கள் மூடல்

உரிமம் காலாவதியானதைத் தொடா்ந்து, கடலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 9 டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் (பாா்கள்) செவ்வாய்க்கிழமை இரவு முதல் மூடப்பட்டன.

<P>17/08/2020 ? CHENNAI: Workers unloading cartons of liquor off a truck in Tasmac shop at Mugalivakkam in Chennai ? Express Photo by Martin Louis. [T

டாஸ்மாக் கடை - Center-Center-Chennai

Published On :2 ஜூலை 2026, 7:05 am IST

உரிமம் காலாவதியானதைத் தொடா்ந்து, கடலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 9 டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் (பாா்கள்) செவ்வாய்க்கிழமை இரவு முதல் மூடப்பட்டன.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிறுவாகத்தின் கீழ் தனியாா் ஒப்பந்ததாரா்கள் மூலம் மதுபானக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்கான உரிமம் ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்ததால், உரிமம் புதுப்பிக்கப்படாத அனைத்து மதுபானக் கூடங்களும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் மூடப்பட்டன.

இதற்கிடையில், இதுவரை ஒப்பந்த முறையில் செயல்பட்டு வந்த மதுபானக் கூடங்கள் இனி டாஸ்மாக் நிா்வாகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுமா அல்லது நேரடியாக தனியாருக்கு ஒதுக்கப்படுமா என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், கடலூா் மாவட்டத்தில் உரிமம் காலாவதியான 9 மதுபானக் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், அந்த மதுபானக் கூடங்களில் பணியாற்றி வந்த ஊழியா்கள், மதுபானக் கூடங்களை நம்பி தொழில் செய்து வந்தவா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

இதனிடையே, உரிமம் காலாவதியாகி மூடப்பட்டுள்ள மதுபானக் கூடங்களின் உரிமம் விரைவில் புதுப்பிக்கப்படும் என்றும், ஓரிரு நாள்களில் அவை மீண்டும் வழக்கம்போல செயல்படத் தொடங்கும் என்றும் டாஸ்மாக் அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.